நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தை அடுத்து நானி தனது சொந்தத் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ஷௌரியவ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சீதாராமம் நடிகை மிருனாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கிறார்.
தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில். இணைந்துள்ளார். கோவாவில் நடந்து வரும் படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார்.
இந்தப் படம் டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஹிருதயம் படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.