Homeசெய்திகள்சினிமாசூப்பர் ஹிட் அடித்த மாநாடு... ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளியிட திட்டம்... சூப்பர் ஹிட் அடித்த மாநாடு… ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளியிட திட்டம்…
- Advertisement -

சிம்பு நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்த திரைப்படம் மாநாடு. தொடர்ந்து தோல்விகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வந்த சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் ஒரு கம்பேக்காக அமைந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் நடிகர் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்தை வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்தது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து மிரட்டி இருப்பார். படத்தில் சிம்புவுக்கு நிகராக எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. மேலும், கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியாக நடிக்க, பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டைம் ட்ராவல் கதைகளத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படம் ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு வௌியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.