ஜீவா நடிப்பில் சமீபத்தில் அகத்தியா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்து அர்ஜுன், ராஷி கன்னா ஆகியோர் நடித்திருந்தனர். நேற்று (பிப்ரவரி 28) வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கோ படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தான் என்று கூறியுள்ளார்.
அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ திரைப்படத்தில் நடிகர் ஜீவா நடித்திருந்தார். இந்த படத்தில் அஜ்மல் வில்லனாக நடித்திருந்தார். மேலும் கார்த்திகா, பியா பாஜ்பாய், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை இதற்கு இசை அமைத்திருந்தார். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.
#Jiiva Recent Interview
– #Ko film #SilambarasanTR was supposed to be made by a few Date Issue films. That film did not happen. After that, I acted in that film.#Aghathiyaa #STR49
pic.twitter.com/lOep8JD2UZ— Movie Tamil (@MovieTamil4) March 1, 2025
திருப்பங்கள் நிறைந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு என கூறியுள்ளார் ஜீவா. கால்ஷீட் பிரச்சனை காரணமாக சிம்பு அந்த படத்தில் நடிக்க முடியவில்லை எனவும் அவருக்கு பதிலாக தான் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.