Homeசெய்திகள்சினிமாஆசிரியர் தின ஸ்பெஷலாக 'சார்' படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

ஆசிரியர் தின ஸ்பெஷலாக ‘சார்’ படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

-

- Advertisement -

சார் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

நடிகர் விமல் தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆசிரியர் தின ஸ்பெஷலாக 'சார்' படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!அடுத்ததாக இவரது நடிப்பில் தேசிங்கு ராஜா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் கலகலப்பு 3 திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் விமல். இதற்கிடையில் விமல் நடிப்பில் உருவாகி இருந்த போகுமிடம் வெகு தூரம் இல்லை எனும் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் நடிகர் விமல், சார் எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்த படத்தை நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் இயக்கியிருக்கிறார். இதில் விமலுடன் இணைந்து சாயாதேவி கண்ணன், சரவணன், ரமா, சிராஜ் உழைத்த பலரும் நடித்திருக்கின்றனர். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறது. சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்க இனியன் ஜெய் ஹரிஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசரும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தின ஸ்பெஷலாக சார் படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ