Homeசெய்திகள்சினிமாமீண்டும் கமல்ஹாசனை போல் மிமிக்ரி செய்த சிவகார்த்திகேயன்..... வைரலாகும் வீடியோ!

மீண்டும் கமல்ஹாசனை போல் மிமிக்ரி செய்த சிவகார்த்திகேயன்….. வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனை போல் மிமிக்ரி செய்து காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.மீண்டும் கமல்ஹாசனை போல் மிமிக்ரி செய்த சிவகார்த்திகேயன்..... வைரலாகும் வீடியோ!உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, ராகுல் போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. மேலும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத்11 தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி துபாய், ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் ப்ரோமோஷன் பணிகளில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு வருகிறார். அப்போது சிவகார்த்திகேயனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், அமரன் திரைப்படத்தை பார்த்து கமல்ஹாசன் சார் என்ன சொன்னார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நல்லா இருக்கு என்று கமல்ஹாசன் சொன்னதாக கூறினார் சிவகார்த்திகேயன். ஆனால் ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனை போல் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டதால் கமல்ஹாசன், ‘நல்லா இருக்கு’ என்று சொல்வதைப் போல் மிமிக்கிரி செய்து காட்டினார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன், பல நடிகர்களைப் போல் மிமிக்ரி செய்து காட்டுவார். அதன்படி ஏற்கனவே அமரன் பட விழா ஒன்றில் கமல்ஹாசனை போல் பேசி அசத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ