- Advertisement -
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோலிவுட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன். தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். மெரினா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரேமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், டாக்டர், டான் என அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.




