Homeசெய்திகள்சினிமாநான் விஜய் சேதுபதியுடன் நடிக்க விரும்புகிறேன்......... நடிகர் சிவகார்த்திகேயன்!

நான் விஜய் சேதுபதியுடன் நடிக்க விரும்புகிறேன்……… நடிகர் சிவகார்த்திகேயன்!

-

திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தை கடந்த 2020 யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்

சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மிஷ்கின் அதிதி சங்கர், சரிதா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு மெதுவா அய்யனார் ஒளிப்பதிவு செய்ய பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். ஒரு பேண்டஸி கதைகளத்தில் உருவாக்கி உள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் நடிக்கும் பெரும்பாலான படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று சிவகார்த்திகேயனின் படங்களை கண்டு ரசிப்பர். சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களைப் போலவே தற்போது வெளியாகி உள்ள மாவீரன் திரைப்படமும் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. மேலும் வெளியான 4 நாட்களில் இப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தேங்க்ஸ் மீட் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அந்த விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், “விஜய் சேதுபதியுடன் இணைந்து நான் நடிக்க விரும்புகிறேன். விரைவில் அது நடக்கும் என்று நம்புகிறேன். எல்லோரும் நானும் விஜய் சேதுபதியும் போட்டியாளர்கள் என்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை” என்று பேசியுள்ளார்.

 

 

MUST READ