spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதொடர்ந்து தள்ளிப்போகும் அமரன் ரிலீஸ் தேதி... புதிய அப்டேட் இதோ...

தொடர்ந்து தள்ளிப்போகும் அமரன் ரிலீஸ் தேதி… புதிய அப்டேட் இதோ…

-

- Advertisement -
அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக அவரது நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த அயலான் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

we-r-hiring
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைத்து அண்மையில் டைட்டிள் டீசரையும் படக்குழு வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் அமரன் படத்தை தடை செய்யக் கோரியும், டீசரையும் நீக்கக்கோரியும் போர்க்கொடி தூக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்தனின் கதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிறது.

இந்நிலையில், அமரன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் முதலில் ஜூலை மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்கு தள்ளிப்போனது. இந்நிலையில், செப்டம்பர் 27-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ