- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தொடக்கத்தில் எதிர்நீச்சல், ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனை ஆக்ஷன் ஹீரோவாக முன்னிறுத்திய திரைப்படம் தான் காக்கிச் சட்டை. இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவர் அடுத்தடுத்து ஆக்ஷன் அதிரடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பு மட்டுமன்றி தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதுமட்டுமன்றி பாடல் ஆசிரியராகவும், பாடகராகவும் திகழ்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வௌியாக உள்ளது.
https://x.com/i/status/1796071259366646256