spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஅட்ரா சக்க.... 'SK 25' படத்தின் டைட்டில் டீசர் வந்தாச்சு!

அட்ரா சக்க…. ‘SK 25’ படத்தின் டைட்டில் டீசர் வந்தாச்சு!

-

- Advertisement -

SK 25 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.அட்ரா சக்க.... 'SK 25' படத்தின் டைட்டில் டீசர் வந்தாச்சு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அமரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்து அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுள்ளது. அட்ரா சக்க.... 'SK 25' படத்தின் டைட்டில் டீசர் வந்தாச்சு!எனவே சிவகார்த்திகேயனும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25 வது படமாகும். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

we-r-hiring

இப்படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் தற்போது படக்குழு இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்த படத்திற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருவதோடு சிவகார்த்திகேயனுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் தயாராகி வருகிறது என ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ