Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் - முருகதாஸ் கூட்டணியில் படம்... ஜனவரியில் படப்பிடிப்பு...

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணியில் படம்… ஜனவரியில் படப்பிடிப்பு…

-

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 21-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்திருந்தார். மிஷ்கின், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK21 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி இருந்தார். இது சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படமாக உருவாகிறது. ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் அறிவிப்பு புகைப்படங்களுடன் வெளியானது. இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்நிலையில், பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியை முருகதாஸ் முடித்து விட்டதாகவும், அடுத்த படப்பிடிப்புக்கான முன்னணி வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ