spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசுந்தர் சியின் 'தலைநகரம் 2' ஓடிடியி வெளியானது!

சுந்தர் சியின் ‘தலைநகரம் 2’ ஓடிடியி வெளியானது!

-

- Advertisement -

சுந்தர் சி நடிப்பில் உருவான திரைப்படம் தலைநகரம் 2. கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் தலைநகரம் முதல் பாகம் வெளியானது இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான நிலையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி திரையிடப்பட்டது.

தலைநகரம் டு படத்தை VZ துரை இயக்கியிருந்தார். இதில் சுந்தர்சியுடன் இணைந்து பாலக் லால்வாணி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர், ஆயிரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ரைட் ஐ தியேட்டர்ஸ் மற்றும் அருந்தவம் மூவி மேக்கர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருந்தார்.

we-r-hiring

ஆக்சன் கதை களத்தில் உருவான இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

MUST READ