Homeசெய்திகள்சினிமா'சூர்யா 44' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு!

‘சூர்யா 44’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு!

-

- Advertisement -

சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.'சூர்யா 44' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு!

நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்காலிகமாக சூரியன் 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் சூர்யா தவிர பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் நடிகை ஸ்ரேயா இந்த படத்தின் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா கவனிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைக்கிறார். காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என நம்பப்படுகிறது. 'சூர்யா 44' படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு!இதற்கிடையில் நாளை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (டிசம்பர் 23) வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் டீசர் நாளை காலை 11 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஜானி என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ