Homeசெய்திகள்சினிமாகன்னட சினிமாவில் அறிமுகமாகும் சூர்யா பட நடிகை!

கன்னட சினிமாவில் அறிமுகமாகும் சூர்யா பட நடிகை!

-

- Advertisement -

சூர்யா பட நடிகை கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.கன்னட சினிமாவில் அறிமுகமாகும் சூர்யா பட நடிகை!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. அந்த வகையில் இவர் தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து பீஸ்ட் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதே சமயம் இவர் விஜயின் ஜனநாயகன், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார் பூஜா ஹெக்டே.
இது தவிர சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.கன்னட சினிமாவில் அறிமுகமாகும் சூர்யா பட நடிகை! இவ்வாறு நடிகை பூஜா ஹெக்டே பிஸியான நடிகையாக வலம் வரும் நிலையில், அடுத்தது இவர் கன்னட சினிமாவிலும் அறிமுகமாக போகிறார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகும் பிஆர்பி ஃபர்ஸ்ட் பிளட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் பூஜா ஹெக்டே. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ