Homeசெய்திகள்சினிமாஇந்த மாதத்தில் தியேட்டரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்..... மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த மாதத்தில் தியேட்டரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்….. மிஸ் பண்ணிடாதீங்க!

-

- Advertisement -

மே மாதத்தில் தியேட்டரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்

அரண்மனை 4இந்த மாதத்தில் தியேட்டரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்..... மிஸ் பண்ணிடாதீங்க!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் அரண்மனை 4. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், வி டிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

குரங்கு பெடல்இந்த மாதத்தில் தியேட்டரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்..... மிஸ் பண்ணிடாதீங்க!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் குரங்கு பெடல். சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை கமலக்கண்ணன் இயக்கியுள்ளார்.

தி ப்ரூஃப்இந்த மாதத்தில் தியேட்டரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்..... மிஸ் பண்ணிடாதீங்க!

தன்ஷிகா, மைம் கோபி ஆகியோரின் நடிப்பில் நடன இயக்குனர் ராதிகா இயக்கியுள்ள படம் தான் தி ப்ரூஃப். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஸ்டார்இந்த மாதத்தில் தியேட்டரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்..... மிஸ் பண்ணிடாதீங்க!

கவின் நடிப்பில் இயக்குனர் இளன் இயக்கியுள்ள படம் ஸ்டார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற மே 10 அன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

உயிர் தமிழுக்குஇந்த மாதத்தில் தியேட்டரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்..... மிஸ் பண்ணிடாதீங்க!

பிரபல இயக்குனரும் நடிகருமான அமீர் நடித்துள்ள திரைப்படம் உயிர் தமிழுக்கு. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆதம் பாவா இயக்கியுள்ளார். இந்த படம் மே 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

இங்க நான் தான் கிங்குஇந்த மாதத்தில் தியேட்டரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்..... மிஸ் பண்ணிடாதீங்க!

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் இங்க நான் தான் கிங்கு. இந்த படத்தை ஆனந்த நாராயணன் இயக்க அன்பு செழியன் தயாரித்துள்ளார். இந்த படம் வருகின்ற மே 10 அன்று வெளியாக உள்ளது.

ரசவாதிஇந்த மாதத்தில் தியேட்டரில் ரிலீஸாகும் தமிழ் படங்கள்..... மிஸ் பண்ணிடாதீங்க!

அநீதி, போர் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு அர்ஜுன் தாஸ் ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் ரசவாதி. இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படம் வருகின்றமே 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மௌனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ