Homeசெய்திகள்சினிமாரைட்டு இஸ் பேக்... சுந்தர் சி நடிப்பில் தலைநகரம் 2 ட்ரைலர் வெளியானது!

ரைட்டு இஸ் பேக்… சுந்தர் சி நடிப்பில் தலைநகரம் 2 ட்ரைலர் வெளியானது!

-

தலைநகரம் 2 படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் ‘தலைநகரம்’ திரைப்படம் வெளியானது.
இத்திரைப்படம் ஆஸ்கார் ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார்.

இதற்கு டி இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சுந்தர் சியுடன் ஜோதிர் மயி, பிரகாஷ்ராஜ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலுவின் காமெடி இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.

மேலும் அதிரடி குற்றவியல் திரைப்படமான இது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் எதிர்பாராத அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரம் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திலும் சுந்தர் சி தான் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் பாலக் லால்வாணி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தலைநகரம் முதல் பாகத்தில் நடித்திருந்த வடிவேலு இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை.

முகவரி, நேபாளி, தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களை இயக்கிய வி இசட் துரை தலைநகரம் 2 படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். மேலும் இவர் ஏற்கனவே சுந்தர் சி யின் நடிப்பில் இருட்டு திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டாவது முறையாக தலைநகரம் 2 படத்தில் சுந்தர் சியுடன் இணைந்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் எஎன்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சுந்தர்சிக்கு இது ஒரு கம்பேக் படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

MUST READ