தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது.
சியான் என்ற தமிழ் ரசிகர்கள் கொண்டாடப்படும் விக்ரம் நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் தங்கலான். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். கிஷோர் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கையாண்டிருந்தார். படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் விக்ரமுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கோலார் தங்க வயலில் தங்கம் எப்படி கண்டெடுக்கப்படுகிறது, ஆங்கிலேயர்களின் அதிகாரத்தால் தங்கலான் மக்கள் எப்படி அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்பதை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. படத்தில் விக்ரம், பார்வதி என அனைவரும் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை உலக தரத்திற்கு கொண்டு செல்ல மிகவும் கடுமையாக உழைத்துள்ளனர். இவர்களின் நடிப்பிற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. திரைக்கதையில் என்னும் கவனம் செலுத்தி இருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும். இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளில் சுமார் 13 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் தங்கலான் திரைப்படம் வசூல் ரீதியாக ஜொலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.