நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து பார்வதி மாளவிகா மோகனன் பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது கோலார் சுரங்கத்தில் தமிழர்கள் படும் கஷ்டங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து சமீபத்தில் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டு முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகரித்தது. டீசரில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது.
எனவே ஜிவி பிரகாஷ் இசை இப்படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படம் 2024 ஜனவரி 26 ஆம் நாளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியானால் மட்டுமே இதற்கான விடை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- Advertisement -


