spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகோட் படத்தில் சினேகாவுக்கு பதிலாக என்னுடைய முதல் சாய்ஸ் இந்த நடிகை தான்.... வெங்கட் பிரபு!

கோட் படத்தில் சினேகாவுக்கு பதிலாக என்னுடைய முதல் சாய்ஸ் இந்த நடிகை தான்…. வெங்கட் பிரபு!

-

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கியிருந்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.கோட் படத்தில் சினேகாவுக்கு பதிலாக என்னுடைய முதல் சாய்ஸ் இந்த நடிகை தான்.... வெங்கட் பிரபு! தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இத்திரைப்படம் உலக அளவில் 288 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருந்தனர். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், மைக் மோகன், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் வெங்கட் பிரபு, கோட் படத்தில் சினேகாவிற்கு பதிலாக நடிகை நயன்தாரா தான் நடிகை இருந்தார் என்று கூறியிருக்கிறார். “ஆரம்பத்தில் நடிகை நயன்தாராவை தான் கோட் படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டேன். ஆனால் படத்தின் ரிலீஸுக்கு பிறகு நயன்தாரா என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, சினேகா தான் சரியான சாய்ஸ். அவர் அருமையாக நடித்திருந்ததாக பாராட்டினார்” என்று தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

MUST READ