Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு?

‘தக் லைஃப்’ படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு?

-

- Advertisement -

தக் லைஃப் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.'தக் லைஃப்' படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு?

கடந்தாண்டில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்திற்கு பிறகு நேற்று (ஜூன் 5) மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பிறகு தக் லைஃப் திரைப்படம் கமல்ஹாசனுக்கு சிறந்த கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் திரைக்கதையில் தொய்வுகள் இருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் சிம்புவின் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 'தக் லைஃப்' படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு?இதற்கிடையில் இப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் ரூ. 20 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடகாவில் இப்படம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளில் ரூ. 45 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ