தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன், சிம்பு, மணிரத்னம் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். ஆக்சன் கலந்த கதை களத்தில் கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிகர் சிம்பு நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் திரிஷா, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், நாசர், அபிராமி, ஐஷ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு புதுடெல்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.