Homeசெய்திகள்சினிமாவெறித்தனமான 'வேட்டையன்' பட டீசர் வெளியீடு!

வெறித்தனமான ‘வேட்டையன்’ பட டீசர் வெளியீடு!

-

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன்.வெறித்தனமான 'வேட்டையன்' பட டீசர் வெளியீடு! ரஜினியின் 170 ஆவது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், பகத் பாசில், அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு தமிழில், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து டப்பிங் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்புகள் (Patch work) நடைபெற உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முதல் இரண்டு பாடல்கள் வெளியாகிய இணையத்தை கலக்கி வருகின்றன.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 20) இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் ஆக்ரோஷமான என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக ரஜினி காட்டப்பட்டுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் காவல்துறையின் உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது போல் தெரிகிறது. டீசரின் தொடக்கத்தில் இருந்தே ரஜினியின் கதாபாத்திரத்தை மட்டுமே விளக்குவது போல டீசர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ