spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடோவினோ தாமஸ், திரிஷா கூட்டணியின் புதிய படம் குறித்த அப்டேட்!

டோவினோ தாமஸ், திரிஷா கூட்டணியின் புதிய படம் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

மலையாளத் திரை உலகில் பிரபல நடிகரான டோவினோ தாமஸ் நடிக்க இருக்கும்
புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

டோவினோ தாமஸ், சமீபத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியான 2018 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பெரும் மலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இதைத்தொடர்ந்து டோவினோ தாமஸ், ஐடென்டிட்டி எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அகில் பால், அனாஸ்கான் என்ற இரட்டையர்கள் இயக்குகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான பாரன்சிக் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. ஐடென்டிட்டி திரைப்படமும் பாரன்சிக் திரைப்படத்தைப் போல க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைகளத்தில் உருவாக உள்ளது.

we-r-hiring

இந்த படத்தில் டோவினோ தாமசுடன் இணைந்து மடோனா செபாஸ்டியன் மற்றும் திரிஷா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

MUST READ