spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'2018'-ஐ அடுத்து டோவினோ தாமஸ் நடிக்கும் புதிய படம்....... கதாநாயகி யார் தெரியுமா?

‘2018’-ஐ அடுத்து டோவினோ தாமஸ் நடிக்கும் புதிய படம்……. கதாநாயகி யார் தெரியுமா?

-

- Advertisement -

டோவினோ தாமஸ் இன் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே 5ஆம் தேதி ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியான 2018 திரைப்படத்தில் டோவினோ தாமஸ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். படத்தை அகில் பால், அனாஸ்கான் என்ற இரு இயக்குனர்களும் இணைந்து இயக்க உள்ளனர்.

we-r-hiring

ஏற்கனவே இவர்கள் டோவினோ தாமஸ் வைத்து கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான பாரன்சிக் திரைப்படத்தை இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய அளவில் வெற்றியை தந்த இப்படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது.

ஐடென்டிட்டி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் பாரன்சிக் திரைப்படத்தைப் போல திரில்லர் கதைகளத்தில் உருவாக உள்ளது.

மேலும் இந்த படத்தில் டோவினோ தாமசுடன் இணைந்து மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து திரிஷாவிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

திரிஷா மலையாளத் திரை உலகில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஹே ஜூட் திரைப்படத்தில் நிவின் பாலி உடன் இணைந்து நடித்துள்ளார்.
அதன் பின் மோகன்லாலுடன் இணைந்து ராம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக டோவினோ தாமஸ் உடன் இணைய உள்ளார்.

MUST READ