‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுமார் நான்கு வருட இடைவெளியில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.


முன்பதிவு வசூல் விவரம்
டிக்கெட் முன்பதிவு தரவுகளின்படி, ‘டாக்ஸிக்’ திரைப்படம் இந்தியாவில் முதல்நாள் முன்பதிவாக மட்டும் ரூ.11.74 கோடி வசூலித்துள்ளது.
கன்னட பதிப்பு: ரூ. 7.72 கோடி
இந்தி பதிப்பு: ரூ. 3.86 கோடி
நேரடி முன்பதிவு மட்டுமின்றி, முன்பதிவுக்காகத் தற்காலிகமாக பிளாக் செய்யப்பட்டிருக்கும் டிக்கெட்டுகளையும் சேர்த்துப் பார்த்தால், முதல்நாளின் மொத்த டிக்கெட் விற்பனை சுமார் ரூ. 19.44 கோடியை எட்டியுள்ளது.
நட்சத்திரக் பட்டாளம் & தொழில்நுட்பக் குழு
நடிகர் யஷ் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கீது மோகன்தாஸின் கதையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் திரைக்கதையை நடிகர் யஷ்ஷும் அவருடன் இணைந்து எழுதியுள்ளார். இப்படத்திற்கு விஷால் மிஸ்ரா இசையமைத்துள்ளார்.
