Homeசெய்திகள்சினிமாவிஜய்க்காக களத்தில் இறங்கும் த்ரிஷா... சூடுபிடிக்கும் நட்சத்திர தேர்தல் களம்..

விஜய்க்காக களத்தில் இறங்கும் த்ரிஷா… சூடுபிடிக்கும் நட்சத்திர தேர்தல் களம்..

-

- Advertisement -
நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் திரைப்பயணம், இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. முகம், உடல் எடை, தோற்றம் என அனைத்திற்கும் கேலி, கிண்டல் செய்யப்பட்ட ஒரு இளைஞன், இன்று ஒட்டுமொத்த இந்திய திரையுலமும் கொண்டாடும் தளபதியாக உயர்ந்து நிற்கிறார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் கடந்த சில மாதங்களாக, விஜய் மக்கள் இயக்கம் எனும் பேரில் பொதுமக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து வந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அண்மையில் தொடங்கப்பட்ட இந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்துள்ளனர். கட்சி தொடங்கியது முதலே அடுத்தடுத்து அரசியல் போர்க்களத்திற்கு தேவையான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை, 100 மாவட்டங்களாகப் பிரிந்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றி கழகம் முடிவு செய்தது. மேலும், 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்குடன் கட்சி செயல்பட்டு வருகிறது.

we-r-hiring

 

இந்நிலையில், விஜய் கட்சியின் வெற்றிக்காக நடிகை த்ரிஷா தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருக்கிறாராம். மாவட்ட ரீதியாக த்ரிஷா சார்பில் மகளிர் உறுப்பினர்களை இப்போது முதலே சேர்க்க பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விஜய் கட்சி தொடங்கியது முதல் பலர் அவரை வாழ்த்தி வருகின்றனர். அதே சமயம், அவருடன் பணியாற்றவும் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தும் வருகின்றனர்

MUST READ