Homeசெய்திகள்சினிமாஷர்வானந்திற்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா..... எந்த படத்தில் தெரியுமா?

ஷர்வானந்திற்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா….. எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

திரிஷா,ஷர்வானந்திற்கு அம்மாவாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ப்ரோ டாடி. இந்தப் படத்தில் மோகன்லால், மீனா பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மோகன்லால் மீனாவும் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். இவர்களின் மகனாக பிரித்து ராஜ் நடித்திருந்தார். பிரித்திவிராஜின் காதலியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்திருந்தார். வித்தியாசமான கதைகளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படமானது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை பங்கர்ராஜு படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் பிரித்திவிராஜ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் கதாபாத்திரத்தில் சர்வானந்த் மற்றும் ஸ்ரீலீலா நடிக்கிறார்கள்.
மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்நிலையில் ப்ரோ டாடி படத்தில் அம்மாவாக நடித்த மீனா கதாபாத்திரத்தில் நடிகை திரிஷா நடிக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னைவிட ஒரு வயது மட்டுமே குறைந்த நடிகருக்கு அம்மாவாக த்ரிஷா நடிப்பது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ