நடிகர் அருண் விஜய் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையறத் தாக்க, தடம், குற்றம் 23 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 திரைப்படமும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்ததாக அருண் விஜய் ரெட்ட தல படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அருண் விஜய், பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிகர் சூர்யா தான் நடித்து வந்தார். ஆனால் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா வெளியேறினார்.
அவருக்கு பதிலாக இயக்குனர் பாலா அருண் விஜயை நடிக்க வைத்தார். இயக்குனர் பாலா மிகப்பெரிய கதாநாயகனை கூட கதையின் நாயகனாக மாற்றக்கூடியவர் தான் பாலா. அந்த வகையில் நடிகர் அருண் விஜய்யையும் வித்தியாசமான தோற்றத்தில் காண்பித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அதேசமயம் இந்த படமானது ஜூலை மாதத்தில் வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் வணங்கான் திரைப்படம் வேற லெவலில் தயாராகி இருக்கிறதாம்.
எனவே படத்தின் அவுட்புட்டை பார்த்த அருண் விஜய் வணங்கான் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம். அதன்படி ஏற்கனவே 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய அருண் விஜய் இனிமேல் 8 கோடி சம்பளம் வாங்க முடிவு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் உருவாகி இருக்கும் வணங்கான் திரைப்படமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.