spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் சிம்புவிற்கு திருமணம்..... மணப்பெண் யார்?

நடிகர் சிம்புவிற்கு திருமணம்….. மணப்பெண் யார்?

-

- Advertisement -

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார்.நடிகர் சிம்புவிற்கு திருமணம்..... மணப்பெண் யார்? அதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கும் நிலையில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. அதன்படி இந்த படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதாவது கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் பரவலாக பரவி வருகின்றன. அதாவது 41 வயதாகும் சிம்பு எப்போது திருமணம் செய்து கொள்வார்? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில்தான் சிம்புவின் தந்தையும் பிரபல நடிகருமான டி. ராஜேந்தர் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார்.நடிகர் சிம்புவிற்கு திருமணம்..... மணப்பெண் யார்? அதன்படி தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகர் ஒருவரின் மகளை தான் சிம்பு திருமணம் செய்து கொள்ளப் போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. எனவே சிம்புவின் வருங்கால மனைவி யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ