Homeசெய்திகள்சினிமாஜூலையில் வெளியாகும் 'வணங்கான்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ஜூலையில் வெளியாகும் ‘வணங்கான்’…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

வணங்கான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஜூலையில் வெளியாகும் 'வணங்கான்'.... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

நடிகர் அருண் விஜய் கடைசியாக மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து இவர் ரெட்ட தல எனும் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கியுள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.

அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே வெளியான தகவலின்படி வணங்கான் திரைப்படமானது 2024 ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் டிரைலர் போன்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ