நடிகர் அஜித் தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மீகாமன், தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் கார் சாகச காட்சியின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, விடாமுயற்சி படக்குழுவை சந்தித்துள்ளார். அதாவது அஜித், திரிஷா ஆகியோருடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் அஜித்துடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -


