spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் அடுத்த படம்.... டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அப்டேட்!

விஜய் ஆண்டனியின் அடுத்த படம்…. டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ரோமியோ, ரத்தம், வள்ளி மயில் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சி எஸ் அமுதன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ரத்தம் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாக இருக்கிறது. இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய படத்தின் இயக்குனர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ