spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள குஷி..... ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள குஷி….. ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது சிவா நிர்வனா இயக்கத்தில் குஷி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

we-r-hiring

மகாநதி படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா கூட்டணி குஷி திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, ரோகினி, லட்சுமி, ஸ்ரீகாந்த், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ரொமான்டிக்கான காதல் கலந்த கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது.காஷ்மீர், கேரளா, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்களுக்கு முன்பாக முழுவதும் நிறைவடைந்தது. இதற்கிடையில் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் குஷி படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ