Homeசெய்திகள்சினிமாபேயாக நடிக்கும் விஜய் பட நடிகை.... 'காஞ்சனா 4' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

பேயாக நடிக்கும் விஜய் பட நடிகை…. ‘காஞ்சனா 4’ குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

காஞ்சனா 4 குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.பேயாக நடிக்கும் விஜய் பட நடிகை.... 'காஞ்சனா 4' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

ராகவா லாரன்ஸ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஹண்டர், பென்ஸ், கால பைரவா, புல்லட் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அடுத்தது இவர் காஞ்சனா 4 திரைப்படத்தை தானே தயாரித்து இயக்கி நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இதன் படப்பிடிப்பு 2024 செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. பேயாக நடிக்கும் விஜய் பட நடிகை.... 'காஞ்சனா 4' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!ஏற்கனவே ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி, காஞ்சனா 1, 2, 3 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நிலையில் காஞ்சனா 4 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் பேயாக நடிக்க இருக்கிறார் என்று லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. பூஜா ஹெக்டே தற்போது சூர்யாவின் ரெட்ரோ படத்தை முடித்துவிட்டு தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையினால் இந்த படத்தை முடித்த பின்னர் காஞ்சனா 4 படத்தில் இணைவார் என்று நம்பப்படுகிறது.

MUST READ