Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்'.... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

விஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்'.... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பெயர் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய 50வது படமாக வெளியான மகாராஜா திரைப்படம் தமிழ்நாட்டை தாண்டி சீனாவிலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து வெளியான விடுதலை 2 திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில்தான் நடிகர் விஜய் சேதுபதி தனது 51 வது படமான ஏஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்'.... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடித்திருக்கிறார். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்க 7CS என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இருந்து வெளியான உருகுது உருகுது எனும் பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்'.... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று (ஏப்ரல் 19) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த அறிவிப்பு ரிலீஸ் தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ