பா. ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் வெறித்தமான உருவாகும் தங்கலான்…

பா. ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படம் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

பா. ரஞ்சித் தற்போது விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்‘ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோனும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

கோலார் தங்கச் சுரங்கம் கதைக்களத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Thangalaan

தற்போது படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. படத்தின் 80% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாம். KGF-ல் 55 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தது, இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளதாம். மே மாதத்துக்குள் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருக்கிறதாம். அவற்றை முடிக்க சில காலம் எடுக்கும் என்பதால் படத்தை இந்தாண்டு இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனராம்.

Advertisement