spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷின் அண்ணனாக களமிறங்கும் கன்னட சூப்பர் ஸ்டார்🔥... கேப்டன் மில்லர் அப்டேட்!

தனுஷின் அண்ணனாக களமிறங்கும் கன்னட சூப்பர் ஸ்டார்🔥… கேப்டன் மில்லர் அப்டேட்!

-

- Advertisement -

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படம் குறித்த அருமையான அப்டேட்கள் கிடைத்துள்ளது.

தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசி மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்திற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் பாதுகாப்பு பகுதியில் மிகப் பெரிய செட் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

we-r-hiring

இந்தப் படத்தில் தனுஷ் இதுவரை காணப்படாத புதிய தோற்றத்தில் நடிக்கிறார்.  படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். கலையரசன் மற்றும் நிவேதிதா சதீஸ் ஆகியோரும் கூட படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் சிவராஜ் குமார் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது அவர் கேப்டன் மில்லர் படத்திலும் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் கதை சுதந்திர இந்தியாவின் 1942 கால கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் தனுஷின் சகோதரராக சிவராஜ் குமார் நடிக்கிறாராம். பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக போரிடும் பழங்குடி மக்கள் இனத்தை சேர்ந்தவராக இருவரும் நடிக்கின்றனராம். சிவராஜ் குமாருக்கு குதிரையில் சவாரி செய்யும் காட்சிகள் மற்றும் பல அருமையான காட்சிகள் படத்தில் இருக்கின்றதாம்.

இன்னும் இரண்டு கட்டங்களை அடுத்து படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

MUST READ