Homeசெய்திகள்சினிமா"இது ரொம்ப மோசம், தயவு செஞ்சு இப்படி இருக்காதீங்க"... மருத்துவமனையில் அட்மிட் ஆன குஷ்பூ!

“இது ரொம்ப மோசம், தயவு செஞ்சு இப்படி இருக்காதீங்க”… மருத்துவமனையில் அட்மிட் ஆன குஷ்பூ!

-

நடிகை குஷ்பூ தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தார். தமிழ்க் சினிமாவின் முதன்முதலாக ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவுக்கு தான்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் சூப்பர் ஹிட் ஆனார் குஷ்பூ.

தற்போது குஷ்பூ முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ளார். இந்நிலையில் தற்போது  குஷ்பூ உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“நான் சொன்னது போல், காய்ச்சல் மோசமானது. இப்போது என்னையும் தாக்கியுள்ளது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் உடல் சில அறிகுறிகளை மெதுவாகச் சொல்லும் போது தயவு செய்து அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். மீட்புக்கான பாதையில், ஆனால் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.”  என்று தெரிவித்துள்ளார்.

குஷ்பூவிரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ