spot_imgspot_imgspot_imgspot_img
HomeGeneral'வாரிசு' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு- ரசிகர்கள் ஆட்டம் ஆடி கொண்டாட்டம்

‘வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு- ரசிகர்கள் ஆட்டம் ஆடி கொண்டாட்டம்

-

- Advertisement -

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வருகிற  பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

we-r-hiring

மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சென்னை, அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்கம் அருகில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது.

அம்பத்தூர் ராக்கி  திரையரங்கில்,  விஜய் ரசிகர்கள் ஒன்று கூடி, கொண்டாடி விஜயின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து மேளதாளங்களுடன் கொண்டாடினர்.

சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு விஜய் கட் அவுட்டை சாலையில் எடுத்து வந்தனர்.

திரளாக 100க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் நுழைவு வாயில் நின்று ஆட்டம் ஆடி கொண்டாடினர்.

MUST READ