HomeGeneralSkoda நிறுவனத்தின் Compact SUV - Kylaq கார் அறிமுகம்

Skoda நிறுவனத்தின் Compact SUV – Kylaq கார் அறிமுகம்

-

- Advertisement -
kadalkanni

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Skoda நிறுவனத்தின் Compact SUV காரான Kylaq அறிமுகமானது.

Skoda நிறுவனத்தின் Compact SUV - Kylaq கார் அறிமுகம்

ஸ்கோடாவின் கைலாக் இந்திய போர்ட்ஃபோலியோவில்  புதிய  அறிமுக SUV மாடல் ஆகும். கிளாசிக் (Classic), சிக்னேச்சர் (Signature), சிக்னேச்சர் பிளஸ் (Signature plus) மற்றும் பிரெஸ்டீஜ் (Prestige) என நான்கு வெரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள அம்சங்கள் 10.1-இன்ச் தொடுதிரை (touch screen), காற்றோட்டமான முன் இருக்கைகள் (Ventilated front seats) மற்றும் சன்ரூஃப் (Sun Roof) ஆகியவை அடங்கும். பாதுகாப்பு கருவியில் ஆறு ஏர்பேக்குகள் (Six Air bags), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (Electronic stability control) மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் (Traction Control) ஆகியவை அடங்கும்.

இதன் ஆரம்ப விலை ரூ.7.89 லட்சம் ஆக நிர்ணயம் வரும் டிசம்பர் 2ம் தேதி இதற்கான முன்பதிவு தொடங்குகிறது.அடுத்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி முதல் டெலிவரி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதா?

MUST READ