டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து விடும் என்பதால், பொதுமக்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் பான்–ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அந்த பான் கார்டு செயலிழந்ததாக கருதப்படும் என அதிகாரிகள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணங்களாக பான் மற்றும் ஆதார் அட்டைகள் உள்ளன. குறிப்பாக, வங்கி கணக்குகள், வருமான வரி கணக்கு தாக்கல், சொத்து வாங்கல், முதலீடு உள்ளிட்ட அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு கட்டாயமாகும். பான் கார்டு செயலிழந்தால், வருமான வரி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் எங்கும் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே மொபைல் போன் அல்லது லேப்டாப் மூலம் பான்–ஆதார் இணைப்பை செய்து கொள்ளலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பான்–ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
முதலில் உங்கள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
- https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
- Quick Links பகுதியில் Link Aadhaar Status என்பதை கிளிக் செய்யவும்
- உங்கள் PAN எண் மற்றும் Aadhaar எண் ஆகியவற்றை உள்ளிடவும்
இதன் மூலம் பான்–ஆதார் இணைப்பு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.
பான்–ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
பான் மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், அதே இணையதளத்தில் Quick Links கீழ் Link Aadhaar என்பதை கிளிக் செய்யவும். உங்கள் PAN எண் மற்றும் Aadhaar எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டுமா?
2017 ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பு வழங்கப்பட்ட பான் கார்டுகளுக்கு, ஆதார் இணைப்பதற்காக ரூ.1000 அபராதம் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதற்கான நடைமுறை:
- Continue to Pay Through e-Pay Tax என்பதை கிளிக் செய்யவும்
- PAN எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்
- வரும் OTP-ஐ உள்ளிட்டு சரிபார்ப்பை முடிக்கவும்
- Income Tax என்பதில் Proceed என்பதை கிளிக் செய்து கட்டணத்தை செலுத்தவும்
கட்டணம் செலுத்திய பிறகு இணைப்பு செய்வது எப்படி?
மீண்டும் https://www.incometax.gov.in/iec/foportal/ இணையதளத்திற்கு செல்லவும்
Link Aadhaar என்பதை கிளிக் செய்யவும், ஆதார் எண்ணை உள்ளிட்டு Validate என்பதை கிளிக் செய்யவும், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிடவும், OTP சரிபார்ப்பு முடிந்ததும், “PAN–Aadhaar successfully linked” என்ற செய்தி திரையில் தோன்றும்.
வாக்காளர் பட்டியலில் பேர் விடுபட்டவங்க விண்ணப்பிக்க ரெடியா? தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!


