spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது - செல்வப்பெருந்தகை

எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது – செல்வப்பெருந்தகை

-

- Advertisement -

எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது - செல்வப்பெருந்தகைஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்; எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கமிட்டி செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியா என்பதை திமுக தலைமையும், காங்கிரஸ் தேசிய தலைமையும் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக சிந்தனை உள்ளவர்களுக்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? என்றும் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், முதலமைச்சா் ஸ்டாலினும் ராகுல் காந்தியும் சோ்ந்து முடிவு எடுப்பாா்கள். ஆட்சியில் பங்கு தமிழ் நாட்டுக்கு ஒத்து வராது என முதலமைச்சா் கூறிய நிலையில் செல்வப் பெருந்தகை பேட்டியளித்துள்ளாா். தமிழ் நாட்டு நலனுக்கு எதிராக சிந்தனை உள்ளவா்களுக்கு மக்கள் எப்படி வாக்களிப்பாா்கள்?  எங்கள் கூட்டணி நன்றாக இருக்கிறது, காங்கிரஸ் தலைமை பேசி வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

தொடர்கதையாகும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

we-r-hiring

MUST READ