Homeசெய்திகள்தமிழ்நாடு”திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்…திருமாவளவனை களமிறக்க வலியுறுத்திய விசிக…நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்!”

”திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்…திருமாவளவனை களமிறக்க வலியுறுத்திய விசிக…நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்!”

-

- Advertisement -

தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் ஜோசப் விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காலியாகியுள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட வேண்டும் என விசிகவினர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்…திருமாவளவனை களமிறக்க வலியுறுத்திய விசிக…நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்!”

we-r-hiring

திருமாவளவனைதுணை முதல்வர்ஆக்கத் துடிக்கும் விசிக தொண்டர்கள்
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் நடைபெற்ற விசிகவினர் ஆலோசனைக் கூட்டத்தில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அதிரடி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.  அதில், விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்றும், அவர் அமோக வெற்றி பெற்று தவெக அமைச்சரவையில் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் விசிகவினர் வலியுறுத்தியுள்ளனர். இதுவே எளிய மக்களின் விருப்பம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “எனக்குப் பதவி ஆசை இல்லை; வன்னி அரசு அமைச்சராவதுதான் சரியாக இருக்கும்” எனக் கூறி தான் போட்டியிடப் போவதில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இருப்பினும், தற்போது தொண்டர்கள் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது விசிக மற்றும் தவெக கூட்டணிக்குள் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

7 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியா?
இதற்கிடையில், காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்காமல், தமிழக வெற்றி கழகமே நேரடியாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தோழமைக் கட்சிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இதுகுறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று வைகோ அறிவித்துள்ள நிலையில், தவெக-வின் இந்த அதிரடி முடிவு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.”திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்…திருமாவளவனை களமிறக்க வலியுறுத்திய விசிக…நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்!”

அதிமுக எம்.எல்.க்கள் ராஜினாமாவும், நீதிமன்ற வழக்கும்
மற்றொரு புறம், அதிமுக தரப்பில் இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், தமிழகத்தில் காலியாகும் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த இடைத்தேர்தல்களை நடத்துவதற்கு அதிமுக தலைமை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ஆளுநர் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்துள்ள அதிமுக, இரட்டை இலை சின்னத்தில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி. விஜயபாஸ்கரின் ராஜினாமாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியைத் தக்கவைக்க தவெக நேரடியாகக் களம் காணத் துடிக்கும் வேளையில், திருமாவளவனை துணை முதல்வராக்க விசிக தொண்டர்கள் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கெடு!

MUST READ