Homeசெய்திகள்தமிழ்நாடு"அம்மாவாசைகளை அடையாளம் காணுங்கள்; பெரியார் - அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள்" – அன்னூர் பொதுக்கூட்டத்தில் நடிகர்...

“அம்மாவாசைகளை அடையாளம் காணுங்கள்; பெரியார் – அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள்” – அன்னூர் பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், ஆ.ராசா எம்.பி. எழுச்சி உரை!

-

- Advertisement -

“இனிமேலாவது அமைதிப்படை ‘அம்மாவாசை’களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்; அவர்களை ‘நாகராஜ சோழன்’ ஆக்கிவிடாதீர்கள்” என்றும், “விஜய் ரசிகர்களே… உங்கள் தலைவர் கூறியபடி பெரியார், அம்பேத்கர் புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்” என்றும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரைப்பட நடிகர் சத்யராஜ் உருக்கமாகப் பேசியுள்ளார்.
"அம்மாவாசைகளை அடையாளம் காணுங்கள்; பெரியார் - அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள்" – அன்னூர் பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், ஆ.ராசா எம்.பி. எழுச்சி உரை!

​கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் மற்றும் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பொதுக்கூட்டம் தபெதிக ப.நிவாஸ்கர் முன்னிலையில் நடைபெற்றது. இச்சிலைகளையும் படிப்பகத்தையும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் நடிகர் சத்யராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

we-r-hiring

​”இந்தியாவிலேயே தனித்துவமான கிராமம்” – ஆ.ராசா எம்.பி. பெருமிதம்

​விழாவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதாவது, “தமிழகத்திலோ அல்லது இந்தியாவிலோ வேறு எங்கும் காண முடியாத தனித்துவமான பெருமையை இந்த நல்லிசெட்டிபாளையம் கிராமம் பெற்றுள்ளது. உபி-யில் மாயாவதி பெரியாருக்குச் சிலை வைத்தார். தமிழகத்தில் அம்பேத்கருக்குப் பல இடங்களில் சிலைகள் உள்ளன. ஆனால், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவருக்கும் ஒரே இடத்தில், ஒரே மேடையில் சிலை அமைந்திருப்பது இந்த கிராமத்தில் தான். சட்டச் சிக்கல்களையும் கடந்து இதனைச் சாதித்துக் காட்டியுள்ள இப்பகுதி இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகள்.
"அம்மாவாசைகளை அடையாளம் காணுங்கள்; பெரியார் - அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள்" – அன்னூர் பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், ஆ.ராசா எம்.பி. எழுச்சி உரை!
​பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார் என்று பேசுவதைப் போல, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்காக அம்பேத்கர் ஆற்றிய பணிகளையும் நாம் அதிகம் பேச வேண்டும். இன்று கல்வி கற்று, அரசு உயர் பதவிகளில் இருக்கும் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் அம்பேத்கருக்கு நன்றிக்கடன்பட்டவர்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் 340வது பிரிவின் கீழ் பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் அமைய அடித்தளமிட்டவர் அம்பேத்கர். அதன் விளைவாக வந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளால் தான் இன்று பலரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகப் பொறுப்பேற்க முடிந்துள்ளது. ​பாசிச மற்றும் சாதிய சக்திகள் தலைதூக்கும் இந்நேரத்தில், நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பைக் காக்க அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கேடயமாக விளங்குகிறது.”

​”அம்மாவாசைகளை அடையாளம் காணுங்கள்” – நடிகர் சத்யராஜ் அதிரடி

​இதனைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் பேசியதாவது,”அன்னூர் நல்லிசெட்டிபாளையம் கிராமத்தைப் போல, தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளை ஜோடியாக வைக்க வேண்டும். அப்போதுதான் இங்கு யாரும் ‘சிண்டு முடியும்’ வேலைகளைச் செய்ய முடியாது. ​நான் நடித்த ‘அமைதிப்படை’ படத்தில் மிக மோசமான வில்லன் கதாபாத்திரமான அம்மாவாசையாக நடித்திருந்தேன். இன்றைக்கு நிஜ வாழ்க்கையிலும் உங்களைச் சுற்றி இருக்கும் அம்மாவாசைகளை அடையாளம் கண்டுபிடியுங்கள் சாமிகளா… அவர்களை ‘நாகராஜ சோழன்’ ஆக உயர்த்தி அரியணையில் அமர வைத்துக் கொண்டே இருக்காதீர்கள். சரிப்பட்டு வராது; அதற்கு நாம் கொஞ்சமாவது படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

​தவெக தொண்டர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சத்யராஜ் வேண்டுகோள்
​நான் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன் தான். அன்று எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர் மன்றங்கள் இருந்தபோது, ஒரு பக்கம் ‘நாவலர் படிப்பகம்’, மறுபக்கம் ‘காமராசர் படிப்பகம்’ என்று புத்தகங்கள் நிறைந்திருக்கும். மாலை நேரத்தில் நாங்கள் அங்குச் சென்று படிப்போம். கொள்கையும், ரசிகர் மன்றமும் ஒன்றாக இருந்தது.
"அம்மாவாசைகளை அடையாளம் காணுங்கள்; பெரியார் - அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள்" – அன்னூர் பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், ஆ.ராசா எம்.பி. எழுச்சி உரை!

​இன்றைய ‘நண்பா… நண்பி’களுக்கும், எனது அன்புத்தம்பி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்கள் தலைவர் விஜய் என்ன சொல்லியிருக்கிறார்? ‘எங்களது கொள்கைத் தலைவர்கள் பெரியார், அம்பேத்கர்’ என்று கூறியிருக்கிறார். ‘திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்’ என்று பேசியிருக்கிறார். நாங்கள் சொல்லவில்லை, உங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். ​அப்படியென்றால், உங்கள் தலைவர் சொன்ன பெரியாரையும், அம்பேத்கரையும் நோக்கி நீங்கள் கொஞ்சமாவது போக வேண்டுமா, இல்லையா? தயவுசெய்து அவர்கள் எழுதிய புத்தகங்களைத் தேடிப் போய் படியுங்கள். வெறும் பெயர்களை மட்டும் கேட்டால் போதாது, அதனுள் என்ன இருக்கிறது என்பதைப் பாருங்கள். அப்போதுதான் நீங்கள் இன்னும் பக்குவப்படுவீர்கள்; வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். நமது சமூகம் இன்று இந்த அளவுக்கு உயர்ந்த நிலைக்கு வந்ததற்கு அவர்கள் இருவரும் எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது அப்போதுதான் புரியும்.

​”அவர்கள் உலக மனிதகுலத்தின் இரு கண்கள்”

​பெரியாரைப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராகவும், அம்பேத்கரை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவராகவும் சித்தரித்து, இருவருக்கும் இடையே மோதலை உருவாக்கச் சிலர் முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவருமே ஒட்டுமொத்த மனித சமூகத்தின் இரு கண்கள். பெரியார் மகாராஷ்டிராவில் பிறந்திருந்தால் அம்பேத்கராகவும், அம்பேத்கர் ஈரோட்டில் பிறந்திருந்தால் பெரியாராகவும் இருந்திருப்பார்கள். அவ்வளவு ஏன், இவர்கள் ஜெர்மனியில் பிறந்திருந்தால் கார்ல் மார்க்ஸாகக் கூட இருந்திருப்பார்கள். ​மாற்றுச் சிந்தனை கொண்ட பாஜகைச் சேர்ந்தவர்களும் கூட தந்தை பெரியாரும், அம்பேத்கரும் என்ன சொன்னார்கள், சமூக நீதி என்றால் என்ன என்று படித்துப் பார்க்க வேண்டும். உங்களுக்குச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் தலைக்கு மேல் சுற்றி வீசிவிடுங்கள். இதைத்தான் பெரியாரும் ‘நான் சொல்வதை அப்படியே கேட்க வேண்டாம், உங்கள் புத்தியைக் கொண்டு சிந்தித்துப் பாருங்கள்’ என்றார்.
"அம்மாவாசைகளை அடையாளம் காணுங்கள்; பெரியார் - அம்பேத்கர் புத்தகங்களைப் படியுங்கள்" – அன்னூர் பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், ஆ.ராசா எம்.பி. எழுச்சி உரை!

​இன்றைய ‘ஜென் ஜி’ (Gen Z) இளைஞர்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் கொள்கைகளை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்த்து வருகிறார்கள், அவர்களுக்கு எனது பாராட்டுகள். அதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இருக்கும் பெருந்தன்மைகளை யார் முதலமைச்சராக வந்தாலும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ​இங்குப் பெரியார், அம்பேத்கர் சிலை வைக்க நிதி திரட்ட இளைஞர்கள் நீண்ட நாட்களாகப் பெரும்பாடு பட்டுள்ளார்கள் என்பதை அறிந்தேன். இனி, தமிழகத்தில் எந்தக் கிராமத்தில் பெரியார் – அம்பேத்கர் சிலைகளை ஒன்றாக வைக்க நினைத்தாலும் அதற்கு நான் முன்னின்று உதவி செய்வேன். அதேபோல, முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கும் இங்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை” என்று சத்யராஜ் பேசினார்.

MUST READ