Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்; தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: காந்திராஜ்...

புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்; தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: காந்திராஜ் எச்சரிக்கை!

-

- Advertisement -

“தமிழகத்தில் புதிய ரேஷன் அட்ட கோரி விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு, தகுதியின் அடிப்படையில் மிக விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் அல்லது தவறுகள் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்; தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: காந்திராஜ் எச்சரிக்கை!

we-r-hiring

​சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவு வார விழாவையொட்டித் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மற்றும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் (NCDC) இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறந்த பணியாளர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் கலந்துகொண்டு, கூட்டுறவுக் கொடியினை ஏற்றி, உறுதிமொழி ஏற்று வார விழா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

“இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ‘கூட்டுறவின் மூலம் வளர்ச்சி’ என்ற உயரிய நோக்கத்துடன் இந்த ‘கூட்டுறவு வாரம் 2026’ திருவிழா, ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை மாநிலம் முழுவதும் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயிகள், ஏழை எளிய மக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் (Theme) அடிப்படையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

​அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற விழாவில், கடந்த 2025-ஆம் ஆண்டிற்கான விருதுகளின் கீழ், தமிழகத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட 10 தொடக்கநிலை கூட்டுறவுச் சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு முதல் பரிசாக 35,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 25,000 ரூபாயும் அதனுடன் பாராட்டு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பிலும் சிறப்பாகச் செயல்பட்ட 30 சங்கங்களுக்குப் பாராட்டுக் கேடயமும் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.”

“உலகம் முழுவதும் வரும் ஜூலை 4-ஆம் தேதி ‘சர்வதேச கூட்டுறவு தினம்’ கொண்டாடப்பட உள்ள நிலையில், உலகிலேயே மிகப்பெரிய கூட்டுறவு மாநிலமாகத் தற்பொழுது தமிழகம் திகழ்ந்து வருகிறது. அடிமட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களை நாம் மேலும் வலிமைப்படுத்த வேண்டும். இந்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே இணக்கமான, வலிமையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, கிராமப்புற பொருளாதாரத்தை அடுத்த கட்ட மேம்பாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். விவசாயிகளின் வருமானம் பன்மடங்காக உயர வேண்டும் என்பதே எங்களது முதன்மை நோக்கம். ​கூட்டுறவு வங்கிகள் மூலம் ஏழை விவசாயிகள் வாங்கிய 75 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடனை 100 சதவீதம் முழுமையாகத் தள்ளுபடி செய்த ஒரே அரசு நம்ம தமிழக வெற்றிக் கழக அரசுதான் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வார விழாவையொட்டி, தற்பொழுது 77 பயனாளிகளுக்கு 4 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு கூட்டுறவுக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.”

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் காந்திராஜ், புதிய ரேஷன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் மக்களுக்கு நற்செய்தி ஒன்றை வெளியிட்டார். “புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களுக்கு அனைத்துச் சரிபார்ப்புப் பணிகளும் முடிக்கப்பட்டு, மிக விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்படும்” என்றார். மேலும், கூட்டுறவுத் துறையில் ஏதேனும் முறைகேடுகள் புகாராக வந்தால், தவறு செய்தவர்கள் மீது தட்டாமல் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் காந்திராஜ் எச்சரித்துள்ளார்.

பயணிகள் நெரிசலைச் சமாளிக்கத் தெற்கு ரயில்வே அதிரடி – 8 சிறப்பு ரயில்களின் சேவை மேலும் நீட்டிப்பு!

MUST READ