Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரம் பேச 180 கோடி ஒதுக்கீடு: கைதானவர்கள் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு!

தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரம் பேச 180 கோடி ஒதுக்கீடு: கைதானவர்கள் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு!

-

- Advertisement -

தமிழக வெற்றி கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரைபேரம் பேசுவதற்காகக் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று முதற்கட்டமாக 180 கோடி ரூபாய் வரை ஒதுக்கியதாக, இவ்வழக்கில் கைதான நபர்கள் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைபேரம் பேச 180 கோடி ஒதுக்கீடு: கைதானவர்கள் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு!

​தவெக எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பேரம் பேசப்பட்ட விவகாரம் அண்மையில் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், இந்த வழக்கில் இதுவரை 8 பேரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

we-r-hiring

​நட்சத்திர ஹோட்டலில் ரகசியப் பட்டியல்
கைது செய்யப்பட்டவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தின் விபரம், “ஒரு முன்னணி கார்ப்பரேட் நிறுவனம், தவெக சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் வசப்படுத்துவதற்காக எங்களை அணுகியது. இதற்காக முதற்கட்டமாக 180 கோடி ரூபாய் பணமும் ஒதுக்கப்பட்டது. இதற்கான திட்டங்களை வகுக்கச் சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் ரகசிய அறைகள் எடுக்கப்பட்டன. ​சுமார் ஒரு வார காலம் அந்த நட்சத்திர ஹோட்டலிலேயே தங்கியிருந்து, தவெக எம்.எல்.ஏ-க்கள் யாரையெல்லாம் வளைக்கலாம் என்ற தனிப் பட்டியலைத் தயாரித்தோம். அதன் பின்னரே, சென்னையில் உள்ள ஒரு தவெக சட்டமன்ற உறுப்பினர் உட்படப் பல எம்.எல்.ஏ-க்களிடம் போன் மூலமாகவும், நேரடியாகவும் பேரம் பேசும் முயற்சிகளில் இறங்கினோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

​ரகசியம் கசிந்ததால் ஓட்டம்
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், “நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து எம்.எல்.ஏ-க்களை வரவழைத்துப் பேச முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில், இந்த விவகாரம் தவெக தலைமைக்கும் காவல்துறைக்கும் கசிந்துவிட்டது என்பதை உணர்ந்தோம். இதனால் ஆபத்தை உணர்ந்து, திட்டத்தின் பாதியிலேயே ஹோட்டல் அறைகளைக் காலி செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டோம்” என்று கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

​கார்ப்பரேட் நிறுவனத்திற்குப் போலீஸ் நெருக்குடி
கைதானவர்களின் இந்த அதிரடி வாக்குமூலத்தைத் தொடர்ந்து, பின்னணியில் இருந்து குதிரைபேரத்திற்குப் பணம் தந்து உதவிய அந்த குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனத்தைக் காவல்துறை தற்பொழுது துல்லியமாகக் கண்டறிந்துள்ளது. ​இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சில முக்கிய நபர்களைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளுக்குச் சம்மன் அனுப்பி, அவர்களைச் சென்னைக்கு வரவழைத்துத் தீவிர விசாரணை நடத்தப் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மேலும் பல திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: திருச்செந்தூரில் திமுகவினர் அதிரடி சாலை மறியல் – போலீசார் குவிப்பு!

 

MUST READ