Homeசெய்திகள்தமிழ்நாடுகர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு: கோயம்பேட்டில் கர்நாடகப் பேருந்தைச் சிறைபிடித்து த.வா.க. திடீர் போராட்டம்!

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு: கோயம்பேட்டில் கர்நாடகப் பேருந்தைச் சிறைபிடித்து த.வா.க. திடீர் போராட்டம்!

-

- Advertisement -

கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கர்நாடக அரசுப் பேருந்தைச் சிறைபிடித்துத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் பரபரப்பு நிலவியது.கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு: கோயம்பேட்டில் கர்நாடகப் பேருந்தைச் சிறைபிடித்து த.வா.க. திடீர் போராட்டம்!

துப்பாக்கிச் சூடு சம்பவமும் கண்டனக் கோஷங்களும்
கர்நாடக மாநில எல்லை வனப்பகுதியில் வேட்டையாடச் சென்றதாகக் கூறி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழர்கள் 3 பேரை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போராட்டம் நடத்தப்பட்டது.

we-r-hiring

கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் மாவட்டச் செயலாளர் முத்துராஜ் ஆகியோர் தலைமையில் திரண்ட தொண்டர்கள், கைகளில் கண்டனப் பாதாதாங்களுடனும், கர்நாடக மற்றும் தமிழக அரசுகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியும் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

பேருந்து சிறைபிடிப்பு – போக்குவரத்து ஸ்தம்பித்தது
போராட்டத்தின் ஒரு பகுதியாக, அவ்வழியாக வந்த கர்நாடக மாநில அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு தொண்டர்கள் திடீரென சிறைபிடித்தனர். மேலும் சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

காவல்துறை அதிரடி நடவடிக்கை
தகவலறிந்து வந்த கோயம்பேடு காவல்துறையினர், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரைக் கைது செய்து, அரசுப் பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்குக் கொண்டு சென்றனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கையைத் தொடர்ந்து கோயம்பேடு பகுதியில் போக்குவரத்துச் சீரமைக்கப்பட்டது.

வேளாண் கடன் தள்ளுபடி: 3-வது அறிவிப்பிலும் ஏமாற்றமே எஞ்சியது – த.வெ.க. அரசுக்கு எதிராகக் கொதிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்!

MUST READ