Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவில் அதிரடி மாற்றம்: 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிபோகிறதா?

திமுகவில் அதிரடி மாற்றம்: 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிபோகிறதா?

-

- Advertisement -

​​திமுகவில் முக்கிய நிர்வாக மாற்றங்களைச் செய்வதற்கு அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவெடுத்துள்ளார். அதன்படி, இனிவரும் காலங்களில் மாவட்டச் செயலாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு 70 வயது மட்டுமே உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், 70 வயதைக் கடந்த 13 மூத்த மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பதவிகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.திமுகவில் அதிரடி மாற்றம்: 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிபோகிறதா?

​பதவி மாற்றப்படவுள்ளவர்கள் பட்டியல்
​கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 70 வயதைக் கடந்த நிலையில் பதவி மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ள மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் வருமாறு:

we-r-hiring

​கா. சுந்தர் – காஞ்சிபுரம் தெற்கு (72 வயது)

​ஆர். காந்தி – ராணிப்பேட்டை (80 வயது)

​ஏ. வ. வேலு – திருவண்ணாமலை தெற்கு (75 வயது)

​செஞ்சி மஸ்தான் – விழுப்புரம் வடக்கு (71 வயது)

​எஸ். ஆர். சிவலிங்கம் – சேலம் கிழக்கு (75 வயது)

​சு. முத்துசாமி – ஈரோடு தெற்கு (77 வயது)

​சாக்கோட்டை கா. அன்பழகன் – தஞ்சாவூர் வடக்கு (72 வயது)

​ரகுபதி – புதுக்கோட்டை தெற்கு (76 வயது)

​கோ. தளபதி – மதுரை மாநகர் (70 வயது)

​நா. ராமகிருஷ்ணன் – தேனி தெற்கு (77 வயது)

​கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் – (77 வயது)

​அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் – தூத்துக்குடி தெற்கு (74 வயது)

​ரா. ஆவுடையப்பன் – திருநெல்வேலி மேற்கு (81 வயது)

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
​பதவி இழக்கும் இந்த 13 முக்கிய நிர்வாகிகளுக்கு, கட்சியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், துணைப் பொதுச்செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் போன்ற உயர் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​கட்சியின் கீழ்மட்டத்திலிருந்து கட்டமைப்பைச் சீரமைப்பதில் தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவது, இந்த நடவடிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேநீர் விருந்தில் கூட்டணி கணக்கா? கலைஞரின் ‘மாஸ்’ ரூட்டை கையில் எடுக்கிறாரா முதல்வர்? கோடீஸ்வரன் அதிரடி!

MUST READ