திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கில், கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றும், சுமார் 150 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பான விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வரும் வழக்கத்தை மாற்றுவது தொடர்பாகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மாநில அரசின் பொறுப்பு என்றாலும், நீதிமன்ற உத்தரவுகளால் எந்தவிதமான சலசலப்பும், பதற்றமான சூழலும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அனுமதிக்கக் கூடாது; 150 ஆண்டுகளாகத் தொடரும் நடைமுறையை மாற்றக் கூடாது என்பதே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள முக்கிய வாதமாகும்.
