காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு எதுவும் தெரியாததால், அந்தப் பிரச்சினையை அவர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலினிடம், காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கருத்து தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “முதலமைச்சர் இதுவரை எதற்காவது பதில் சொல்லியுள்ளாரா? இதுகுறித்து பத்திரிகையாளர்கள்தான் முதலமைச்சரிடம் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரம் பற்றி முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது என்றும், அதனால்தான் இந்தப் பிரச்சினையை அவர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் எங்கு சென்று என்ன பேசியுள்ளார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழா தொடர்பாகப் பேசிய மு.க.ஸ்டாலின், அந்த விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
புத்தக வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ் தனக்கு வரவில்லை என்றும், தனது உதவியாளரிடம் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் வாழ்த்துச் செய்தி அனுப்பியதாகவும் அவர் விளக்கமளித்தார்.
